அத்தியாயம் 1

அர்ஜுநவிஷாதயோக

அத ப்ரதமோऽத்யாய

46 பிரிவுகள்
அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 1

த்ருதராஷ்ட்ர உவாச |

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவஃ |

மாமகாஃ பாண்டவாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||௧-௧||

த்ருதராஷ்ட்ர உவாச

மொழிபெயர்ப்பு

த்ருதராஷ்டிரர் கூறினார்: ஓ ஸஞ்ஜயா, குருக்ஷேத்திரத்தின் புனித களத்தில் கூடி போராட விரும்பிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 2

ஸஞ்ஜய உவாச |

த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா |

ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத் ||௧-௨||

ஸஞ்ஜய உவாச

மொழிபெயர்ப்பு

ஸஞ்ஜயன் கூறினார்: பாண்டவ இராணுவம் இராணுவ அமைப்பில் நிற்பதைக் கவனித்த மன்னன் துரியோதனன் தனது ஆசிரியர் த்ரோணாச்சாரியரை அணுகி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 3

பஶ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் |

வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஶிஷ்யேண தீமதா ||௧-௩||

மொழிபெயர்ப்பு

துரியோதனன் கூறினான்: மரியாதைக்குரிய ஆசிரியரே! தங்கள் திறமையான சீடரான த்ருபதனின் மகனால் திறமையாக அணி வகுக்கப்பட்டுள்ள பாண்டுவின் மகன்களின் வலிமைமிக்க இராணுவப் படையை பாருங்கள்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 4, 5 மற்றும் 6

அத்ர ஶூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி |

யுயுதாநோ விராடஶ்ச த்ருபதஶ்ச மஹாரதஃ ||௧-௪||

த்ருஷ்டகேதுஶ்சேகிதாநஃ காஶிராஜஶ்ச வீர்யவாந் |

புருஜித்குந்திபோஜஶ்ச ஶைப்யஶ்ச நரபும்கவஃ ||௧-௫||

யுதாமந்யுஶ்ச விக்ராந்த உத்தமௌஜாஶ்ச வீர்யவாந் |

ஸௌபத்ரோ த்ரௌபதேயாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதாஃ ||௧-௬||

மொழிபெயர்ப்பு

பாருங்கள், அவர்கள் அணிகளில் விராடன், பீமன், மற்றும் அர்ஜுனனுக்கு சமமான இராணுவ வலிமை பெற்ற வலிமையான வில்களைத் தாங்கிய யுயுதானன், விராடன், மற்றும் த்ருபதன் போன்ற பல சக்திவாய்ந்த போர்வீரர்கள் உள்ளனர். மேலும், அங்கே த்ருஷ்டகேது, சேகிதானன், காசியின் அருமையான மன்னர் புருஜிதன், குந்திபோஜன், மற்றும் ஷைப்யன் போன்ற திறமையான போர்படை வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்களுடைய அணிகளில், வீரஞ்செறிந்த யுதாமன்யு, ஸுபத்ராவின் மகன் உத்தமௌஜன் மற்றும் சிறந்த போர்வீர தளபதிகளான திரௌபதியின் மகன்களும் உள்ளனர்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 7

அஸ்மாகம் து விஶிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |

நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே ||௧-௭||

மொழிபெயர்ப்பு

ப்ராஹ்மணர்களில் சிறந்தவரே, இப்பொழுது நான் நம் பக்கத்தில் உள்ள வழி நடத்துவதில் சிறப்பு தகுதி உடைய ப்ரதான தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துகிறேன்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 8 மற்றும் 9

பவாந்பீஷ்மஶ்ச கர்ணஶ்ச க்ருபஶ்ச ஸமிதிஞ்ஜயஃ |

அஶ்வத்தாமா விகர்ணஶ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச ||௧-௮||

அந்யே ச பஹவஃ ஶூரா மதர்தே த்யக்தஜீவிதாஃ |

நாநாஶஸ்த்ரப்ரஹரணாஃ ஸர்வே யுத்தவிஶாரதாஃ ||௧-௯||

மொழிபெயர்ப்பு

அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில் எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர். மேலும், அங்கே என் பொருட்டு தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கும் மற்றும் பல வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிய போர்க்கலையில் திறமையானவர்கள்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 10

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் |

பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் ||௧-௧௦||

மொழிபெயர்ப்பு

நமது இராணுவத்தின் வலிமை வரம்பற்றது. மேலும், நாம் பாட்டனார் பீஷ்மரால் திறமையாக வழிநடத்தப் படுகிறோம். அதேசமயம் பீமனால் கவனமாக வழி நடத்தப்படுகின்ற பாண்டவர் இராணுவத்தின் வலிமை வரம்புக்குள்ளானது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 11

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதாஃ |

பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்தஃ ஸர்வ ஏவ ஹி ||௧-௧௧||

மொழிபெயர்ப்பு

ஆகையால், கௌரவ இராணுவத்தின் தனித்தனி தளத்தகைகளுக்கு தற்காப்பு அளிக்கும் அனைத்து தளபதிகளையும் அவரவர் சூழ்நிலையிலிருந்து பாட்டனார் பீஷ்மருக்கு முழு ஆதரவளிக்குமாறு நான் இப்பொழுது அழைக்கிறேன்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 12

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்தஃ பிதாமஹஃ |

ஸிம்ஹநாதம் விநத்யோச்சைஃ ஶங்கம் தத்மௌ ப்ரதாபவாந் ||௧-௧௨||

மொழிபெயர்ப்பு

பின்னர் குரு வம்சத்தின் மாபெரும் போர் வீரரும் பாட்டனாரும் ஆன பீஷ்மர் தனது ஊது சங்கை ஒரு சிங்கத்தின் கர்ஜனையை போன்று உரக்க முழங்கி துரியோதனனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 13

ததஃ ஶங்காஶ்ச பேர்யஶ்ச பணவாநககோமுகாஃ |

ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஶப்தஸ்துமுலோऽபவத் ||௧-௧௩||

மொழிபெயர்ப்பு

அதன்பிறகு ஶங்குகள், பறைகள், எக்காளங்கள், ஊதுகொம்புகள், மற்றும் ஊது குழல்களின் ஒருங்கிணைத்த முழக்கம் பயங்கரமாக இருந்தது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 14

ததஃ ஶ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ |

மாதவஃ பாண்டவஶ்சைவ திவ்யௌ ஶங்கௌ ப்ரதத்மதுஃ ||௧-௧௪||

மொழிபெயர்ப்பு

பின்னர் பாண்டவ இராணுவத்தின் தரப்பிலிருந்து வெள்ளை குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் வீற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 15

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஶோ தேவதத்தம் தநஞ்ஜயஃ |

பௌண்ட்ரம் தத்மௌ மஹாஶங்கம் பீமகர்மா வ்ரு'கோதரஃ ||௧-௧௫||

மொழிபெயர்ப்பு

ஹ்ருஷிகேஶ் தனது பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் சங்கை முழங்கினார், மற்றும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை முழங்கினார். தீராப் பெரும்பசியுடைய, அதிக சக்திவாய்ந்த பணிகளைச் செய்வவருமான பீமன், பௌண்ட்ரம் என்று அழைக்கப்படும் அவரது வலிமையான சங்கை முழங்கினார்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 16

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிரஃ |

நகுலஃ ஸஹதேவஶ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ ||௧-௧௬||

மொழிபெயர்ப்பு

யுதிஷ்டிர மன்னர் அனந்த விஜயம் என்ற சங்கை முழங்கினார். அதே வேளையில் நகுலன் மற்றும் சஹதேவன் ஸுகோஷம் மற்றும் மணிபுஷ்பகம் எனும் சங்குகளை முழங்கினார்கள். சிறந்த வில்லாளரும் மற்றும் சிறந்த போர் வீரருமான காசியின் மன்னர். ஶிகண்டீ, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் வெல்லமுடியாத ஸாத்யகி, த்ருபதன், திரௌபதியின் ஐந்து மகன்கள், மற்றும் ஸுபத்ராவின் வலிமைமிக்க கைகளை உடைய மகன் அபிமன்யு அனைவருமே அவரவர்களின் சங்குகளை முழங்கினார்கள். ஓ, பூமியின் ஆட்சியாளரே,

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 17 மற்றும் 18

காஶ்யஶ்ச பரமேஷ்வாஸஃ ஶிகண்டீ ச மஹாரதஃ |

த்ருஷ்டத்யும்நோ விராடஶ்ச ஸாத்யகிஶ்சாபராஜிதஃ ||௧-௧௭||

த்ருபதோ த்ரௌபதேயாஶ்ச ஸர்வஶஃ ப்ருதிவீபதே |

ஸௌபத்ரஶ்ச மஹாபாஹுஃ ஶங்காந்தத்முஃ ப்ருதக்ப்ருதக் ||௧-௧௮||

மொழிபெயர்ப்பு

யுதிஷ்டிர மன்னர் அனந்த விஜயம் என்ற சங்கை முழங்கினார். அதே வேளையில் நகுலன் மற்றும் சஹதேவன் ஸுகோஷம் மற்றும் மணிபுஷ்பகம் எனும் சங்குகளை முழங்கினார்கள். சிறந்த வில்லாளரும் மற்றும் சிறந்த போர் வீரருமான காசியின் மன்னர். ஶிகண்டீ, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் வெல்லமுடியாத ஸாத்யகி, த்ருபதன், திரௌபதியின் ஐந்து மகன்கள், மற்றும் ஸுபத்ராவின் வலிமைமிக்க கைகளை உடைய மகன் அபிமன்யு அனைவருமே அவரவர்களின் சங்குகளை முழங்கினார்கள். ஓ, பூமியின் ஆட்சியாளரே,

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 19

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் |

நபஶ்ச ப்ருதிவீம் சைவ துமுலோऽப்யநுநாதயந் ||௧-௧௯||

மொழிபெயர்ப்பு

த்ருதராஷ்டிரரே, பயங்கர ஒலி வானத்திலும் பூமியிலும் இடித்து, உங்கள் மகன்களின் இதயங்களை சிதைத்தது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 20

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜஃ |

ப்ரவ்ருத்தே ஶஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவஃ |

ஹ்ருஷீகேஶம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே ||௧-௨௦||

மொழிபெயர்ப்பு

அந்த நேரத்தில் தனது தேரின் கொடியில் ஹனுமானின் முத்திரை குறித்த பாண்டுவின் மகன் அர்ஜுனன் தனது வில்லை எடுத்துக் கொண்டார். ஓ அரசரே, உங்கள் மகன்கள் அவருக்கு எதிராக அணிவகுத்து வருவதை பார்த்த அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பின்வரும் வார்த்தைகளை பேசினார்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 21, 22, 23

அர்ஜுந உவாச |

ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேऽச்யுத ||௧-௨௧||

யாவதேதாந்நிரீக்ஷேऽஹம் யோத்துகாமாநவஸ்திதாந் |

கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந் ரணஸமுத்யமே ||௧-௨௨||

யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதேऽத்ர ஸமாகதாஃ |

தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவஃ ||௧-௨௩||

அர்ஜுந உவாச

மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் கூறினார், ‘தவறாநிலைஉடையவரே, தயவு செய்து எனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் நான் போராட வேண்டிய, இந்த மாபெரும் போரில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்களை என்னால் பார்க்க இயலும். ’ த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன் துரியோதனனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தரப்பில் போர் புரிய இங்கு வந்தவர்களை பார்க்க விரும்புகிறேன்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 24 மற்றும் 25

ஸஞ்ஜய உவாச |

ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ குடாகேஶேந பாரத |

ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் ||௧-௨௪||

பீஷ்மத்ரோணப்ரமுகதஃ ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் |

உவாச பார்த பஶ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||௧-௨௫||

ஸஞ்ஜய உவாச

மொழிபெயர்ப்பு

ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார். பீஷ்மர், த்ரோணாச்சாரியர் மற்றும் பிற மன்னர்கள் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ பார்த்தா, இங்கு குழுமியிருக்கும் குரு வம்சத்தினரை காண்பாய்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 26

தத்ராபஶ்யத்ஸ்திதாந்பார்தஃ பித்ரூ'நத பிதாமஹாந் |

ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூ'ந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா ||௧-௨௬||

மொழிபெயர்ப்பு

அங்கு, இரு படைகளிலும், அவரது தந்தைகள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்வழி மாமன்கள், சகோதரர்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மகன்கள், மருமகன்கள், பேர-மருமகன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் நிறுத்தப்பட்டிருப்பதை அர்ஜுனனால் காண முடிந்தது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 27

ஶ்வஶுராந்ஸுஹ்ருதஶ்சைவ ஸேநயோருபயோரபி |

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேயஃ ஸர்வாந்பந்தூநவஸ்திதாந் ||௧-௨௭||

மொழிபெயர்ப்பு

அங்கு இருந்த அவரது உறவினர்கள் அனைவரையும் பார்த்து, குந்தியின் மகன் அர்ஜுனன் இரக்கத்தால் மூழ்கி, ஆழ்ந்த துக்கத்துடன், பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 28, 29, 30, 31

க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத் |

அர்ஜுந உவாச |

த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் ||௧-௨௮||

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஶுஷ்யதி |

வேபதுஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே ||௧-௨௯||

காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே |

ந ச ஶக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மநஃ ||௧-௩௦||

நிமித்தாநி ச பஶ்யாமி விபரீதாநி கேஶவ |

ந ச ஶ்ரேயோऽநுபஶ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||௧-௩௧||

அர்ஜுந உவாச

மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் கூறினார்: ஓ கிருஷ்ணா, என் சொந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கத்துடன் போருக்கு அணிவகுத்து நிற்பதைப் பார்க்கும் பொழுது என் கை கால்கள் தொய்ந்து என் வாய் வறண்டு போகிறது. என் உடல் முழுதும் சிலிர்த்து நடுங்குகிறது. எனது வில்லான காண்டீவம் என் கையிலிருந்து நழுவுகிறது; எனது சருமம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. ஊசலாடும் என் மனம் குழப்பத்தில் சுழல்கிறது. என்னால் இனி என்னை நிலையாக வைத்திருக்க முடியவில்லை. கேசீ என்ற அரக்கனைக் கொன்ற ஓ கிருஷ்ணா, நான் துரதிருஷ்டவசமான சகுனங்களை மட்டுமே பார்க்கிறேன். இந்தப் போரில் எனது சொந்த உறவினர்களைக் கொல்வதால் எந்தப் பயனும் வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 32

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச |

கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா ||௧-௩௨||

மொழிபெயர்ப்பு

ஓ கிருஷ்ணா, எனக்கு ராஜ்யம் மற்றும் வெற்றியை அடைவதிலும் மற்றும் அவற்றினால் வரும் மகிழ்ச்சியிலும் விருப்பமில்லை. நாம் யாருக்காக ஆவலுடன் ராஜ்யம், இன்பங்கள், தவிர இந்த வாழ்க்கையையே வாழ விரும்புகிறோமோ அவர்களே நம்முன் போரிட நிற்கும்பொழுது இந்த ராஜ்யம், இன்பங்கள், தவிர வாழ்க்கையின் பயன் தான் என்ன?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 33 மற்றும் 34

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஃ ஸுகாநி ச |

த இமேऽவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச ||௧-௩௩||

ஆசார்யாஃ பிதரஃ புத்ராஸ்ததைவ ச பிதாமஹாஃ |

மாதுலாஃ ஶ்வஶுராஃ பௌத்ராஃ ஶ்யாலாஃ ஸம்பந்திநஸ்ததா ||௧-௩௪||

மொழிபெயர்ப்பு

ஓ கிருஷ்ணா, எனக்கு ராஜ்யம் மற்றும் வெற்றியை அடைவதிலும் மற்றும் அவற்றினால் வரும் மகிழ்ச்சியிலும் விருப்பமில்லை. நாம் யாருக்காக ஆவலுடன் ராஜ்யம், இன்பங்கள், தவிர இந்த வாழ்க்கையையே வாழ விரும்புகிறோமோ அவர்களே நம்முன் போரிட நிற்கும்பொழுது இந்த ராஜ்யம், இன்பங்கள், தவிர வாழ்க்கையின் பயன் தான் என்ன? இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம் த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 35

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோऽபி மதுஸூதந |

அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோஃ கிம் நு மஹீக்ருதே ||௧-௩௫||

மொழிபெயர்ப்பு

இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம் த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 36

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்நஃ கா ப்ரீதிஃ ஸ்யாஜ்ஜநார்தந |

பாபமேவாஶ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிநஃ ||௧-௩௬||

மொழிபெயர்ப்பு

எல்லா உயிரினங்களையும் பராமரிப்பவரே, த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் என்ன இன்பத்தை பெறுவோம்? அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும், நாம் அவர்களைக் கொன்றால் நிச்சயமாக நம்மீது பாவம் வரும். எனவே, நம்முடைய சொந்த உறவினர்களையும், த்ருதராஷ்டிரரின் மகன்களையும், நண்பர்களையும் கொல்வது என்பது நமக்கு ஒரு பொருந்தாத செயலாகும். ஓ மாதவா, நமது சொந்த உறவினர்களைக் கொல்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எவ்வாறு நம்புகிறோம்?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 37

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந் |

ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிநஃ ஸ்யாம மாதவ ||௧-௩௭||

மொழிபெயர்ப்பு

எல்லா உயிரினங்களையும் பராமரிப்பவரே, த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் என்ன இன்பத்தை பெறுவோம்? அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும், நாம் அவர்களைக் கொன்றால் நிச்சயமாக நம்மீது பாவம் வரும். எனவே, நம்முடைய சொந்த உறவினர்களையும், த்ருதராஷ்டிரரின் மகன்களையும், நண்பர்களையும் கொல்வது என்பது நமக்கு ஒரு பொருந்தாத செயலாகும். ஓ மாதவா, நமது சொந்த உறவினர்களைக் கொல்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எவ்வாறு நம்புகிறோம்?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 38 மற்றும் 39

யத்யப்யேதே ந பஶ்யந்தி லோபோபஹதசேதஸஃ |

குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் ||௧-௩௮||

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபிஃ பாபாதஸ்மாந்நிவர்திதும் |

குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஶ்யத்பிர்ஜநார்தந ||௧-௩௯||

மொழிபெயர்ப்பு

அவரது எண்ணங்கள் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டன. மேலும், அவர்கள் தங்கள் உறவினர்களை அழிப்பதிலும் அல்லது நண்பர்களுக்கு துரோகம் செய்வதிலும் எந்த தவறையும் உணரவில்லை. ஆயினும், ஓ, ஜனார்தனா(கிருஷ்ணா), நம்முடைய உறவினர்களைக் கொல்வதில் உள்ள குற்றத்தை தெளிவாகக் காணக்கூடிய நாம் ஏன் இந்த பாவத்திலிருந்து விலகக்கூடாது?

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 40

குலக்ஷயே ப்ரணஶ்யந்தி குலதர்மாஃ ஸநாதநாஃ |

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோऽபிபவத்யுத ||௧-௪௦||

மொழிபெயர்ப்பு

ஒரு வம்சம் அழிக்கப்படும்போது, ​​அதன் மரபுகள் அழிக்கப்பட்டு, குடும்பத்தின் மற்றவர்கள் ஒழுங்கற்ற தன்மையில் ஈடுபடுகிறார்கள்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 41

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரியஃ |

ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கரஃ ||௧-௪௧||

மொழிபெயர்ப்பு

ஒழுங்கீனம் பரவலாக ஓங்கும் பொழுது ஓ கிருஷ்ணா, குடும்பப் பெண்கள் தார்மீக நெறியிலிருந்து தவறுகிறார்கள்; மேலும், அவ்வாறு அவமார்க்கத்தில் செல்லும் பெண்களிடம் இருந்து, ஓ விருஷ்ணியின் வழியில் தோன்றியவரே, தேவையற்ற சந்ததியினர் பிறக்கிறார்கள்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 42

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச |

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியாஃ ||௧-௪௨||

மொழிபெயர்ப்பு

தேவையற்ற குழந்தைகளின் அதிகரிப்பு குடும்பத்திற்கும் குடும்பத்தை அழிப்பவர்களுக்கும் நரக வாழ்க்கையை ஏற்படுத்துகிறது. அத்தகைய ஊழல் குடும்பங்களின் மூதாதையர்களும் கர்ம அர்ப்பணிப்புகளை இழந்து, தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 43

தோஷைரேதைஃ குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகைஃ |

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மாஃ குலதர்மாஶ்ச ஶாஶ்வதாஃ ||௧-௪௩||

மொழிபெயர்ப்பு

அவ்வாறு குடும்பப் பாரம்பரியத்தை அழித்துத் தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 44

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந |

நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஶுஶ்ரும ||௧-௪௪||

மொழிபெயர்ப்பு

ஓ ஜனார்த்தனா, குடும்ப மரபுகளை அழிப்பவர்கள் காலவரையின்றி நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 45

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் |

யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதாஃ ||௧-௪௫||

மொழிபெயர்ப்பு

அந்தோ! நாம் நமது மனதைப் பெரும் பாவத்தைச் செய்வதில் ஈடுபடுத்தி இருப்பது எவ்வளவு விசித்திரமானது. அரச இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு, நாம் நமது சொந்த உறவினர்களைக் கொல்ல விரும்புகிறோம். கையில் ஆயுதங்களைக் கொண்டு, த்ருதராஷ்டிரரின் மகன்கள் நிராயுதபாணியாக, போர்க்களத்தில் தடையின்றி என்னைக் கொல்வது மேலானது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 46

யதி மாமப்ரதீகாரமஶஸ்த்ரம் ஶஸ்த்ரபாணயஃ |

தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத் ||௧-௪௬||

மொழிபெயர்ப்பு

அந்தோ! நாம் நமது மனதைப் பெரும் பாவத்தைச் செய்வதில் ஈடுபடுத்தி இருப்பது எவ்வளவு விசித்திரமானது. அரச இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு, நாம் நமது சொந்த உறவினர்களைக் கொல்ல விரும்புகிறோம். கையில் ஆயுதங்களைக் கொண்டு, த்ருதராஷ்டிரரின் மகன்கள் நிராயுதபாணியாக, போர்க்களத்தில் தடையின்றி என்னைக் கொல்வது மேலானது.

அர்ஜுநவிஷாதயோக

ஶ்லோக 47

ஸஞ்ஜய உவாச |

ஏவமுக்த்வார்ஜுநஃ ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஶத் |

விஸ்ரு'ஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்நமாநஸஃ ||௧-௪௭||

ஸஞ்ஜய உவாச

மொழிபெயர்ப்பு

ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிய அர்ஜுனன் மன வருத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டுத் துயரத்தில் மூழ்கிய மனதுடன் தனது வில் மற்றும் அம்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தனது போர்க்களத்தில் தேரின் இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார்.

ௐ தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதா ஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வதே அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோऽத்யாயஃ

வெறும் வாசிப்பு மட்டுமல்ல—
சொந்த தியான வீடியோக்களை உருவாக்குங்கள்.

புனிதமான ஸ்லோகங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அழகான, சினிமா வீடியோக்களாக மாற்றவும். உங்கள் பின்புலத்தைத் தேர்வுசெய்து, மந்திர உச்சாடனத்தை இணைத்து, நவீன வடிவில் கீதையின் ஒளியைப் பரப்புங்கள்.

இந்த அம்சங்களுக்கு பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • உயர்தர பின்னணி கலைப்படைப்பு
  • ஒத்திசைக்கப்பட்ட சமஸ்கிருதம் மற்றும் பொருள் உரை
  • அற்புதமான உச்சாடனம் மற்றும் இசை
Video Generation Preview

ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுங்கள்

நித்ய கீதையின் முழுப் பதிப்போடு ஒரு சினிமா ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள். உயர்தர உச்சாடனம், உண்மையான மொழிபெயர்ப்புகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் ஒரு அமைதியான தியான சரணாலயம்.