அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 10
ஶ்லோக 10
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் |
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் ||௧-௧௦||
மொழிபெயர்ப்பு
நமது இராணுவத்தின் வலிமை வரம்பற்றது. மேலும், நாம் பாட்டனார் பீஷ்மரால் திறமையாக வழிநடத்தப் படுகிறோம். அதேசமயம் பீமனால் கவனமாக வழி நடத்தப்படுகின்ற பாண்டவர் இராணுவத்தின் வலிமை வரம்புக்குள்ளானது.