ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 42
ஶ்லோக 42
தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மநஃ |
சித்த்வைநம் ஸம்ஶயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ||௪-௪௨||
மொழிபெயர்ப்பு
எனவே, அறிவு என்ற வாளால், உன் உள்ளத்தில் எழுந்த ஐயங்களை அறுத்து விடு. பரத வம்சத்தில் தோன்றியவனே, உன்னை கர்ம யோகத்தில் நிலைநிறுத்து. எழுந்திரு, எழுந்து செயலாற்று!