மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 47
ஶ்லோக 47
ஶ்ரேயாந்ஸ்வதர்மோ விகுணஃ பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் |
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ||௧௮-௪௭||
மொழிபெயர்ப்பு
பிறருடைய தர்மத்தைச் சரியாகச் செய்வதைவிட, தன் தர்மத்தைத் தவறாகச் செய்வது மேலானது. மனிதன் தன் இயல்பார்ந்த கடமைகளைச் செய்து பாவத்தைச் சம்பாதிப்பதில்லை.