ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 20
ஶ்லோக 20
த்ரைவித்யா மாம் ஸோமபாஃ பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே |
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக-
மஶ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந் ||௯-௨௦||
மொழிபெயர்ப்பு
வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் தரும் வேதசடங்குகளில் விருப்பம் உள்ளவர்கள் சடங்குகள், யாகங்கள் மூலம் என்னை வணங்குகிறார்கள். யாகங்களில் எஞ்சியிருக்கும் ஸோம ரஸத்தைக் குடித்து, பாவத்திலிருந்து தூய்மையடைந்து, சொர்க்கம் செல்ல முற்படுகிறார்கள். தங்கள் புண்ணிய செயல்களால், சொர்க்கத்தின் அரசனான இந்திரனின் இருப்பிடத்திற்குச் சென்று, தேவலோகத் தேவர்களின் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.