விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 44
ஶ்லோக 44
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஶமீட்யம் |
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யுஃ
ப்ரியஃ ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ||௧௧-௪௪||
மொழிபெயர்ப்பு
எனவே, ஓ போற்றுதலுக்குரிய இறைவனே, ஆழ்ந்து வணங்கி, உம் முன் பணிந்து, உமது அருளுக்காக உம்மை மன்றாடுகிறேன். ஒரு தகப்பன் தன் மகனைப் பொறுத்துக் கொள்வது போலவும், நண்பன் தன் நண்பனை மன்னிப்பது போலவும், பிரியமானவர் பிரியமானவரை மன்னிப்பது போலவும், என் குற்றங்களுக்காக என்னை மன்னியுங்கள்.